பரபரக்கும் அரசியல் களம்... ஜனவரி 25ம் தேதி தவெக செயல்வீரர்கள் கூட்டம்!
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையில் ஜனவரி 25-ஆம் தேதி மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் காலை 10.30 மணிக்கு கூட்டம் தொடங்குகிறது. இதனை தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது. தொகுதி அமைப்பு, தேர்தல் பிரசாரம், நிர்வாகிகளின் பொறுப்புகள், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, தேர்தல் பணியாளர்கள் பயிற்சி ஆகியவை முக்கியமாக பேசப்படவுள்ளன. மாநில தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள், தேர்தல் மேலாண்மை குழுவினர் அனைவரும் இதில் பங்கேற்க உள்ளனர்.
விஜய் தலைமையில் நடைபெறும் முதல் பெரிய ஆலோசனைக் கூட்டமாக இது கருதப்படுகிறது. கரூர் சம்பவத்திற்குப் பிறகு கட்சிக்குள் ஏற்பட்டுள்ள ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தும் கூட்டமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனித்து போட்டியா அல்லது கூட்டணியா என்ற முக்கிய முடிவுகள் இக்கூட்டத்தில் எடுக்கப்படலாம் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!