தவெக 3ம் ஆண்டு தொடக்க விழா... விஜய் மலர் தூவி மரியாதை! 

 
 

தவெகவின் 3ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பனையூரில் கட்சியின் கொள்கைத் தலைவர்களுக்கு விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அஞ்சலையம்மாள், வேலுநாச்சியார், அம்பேத்கர், பெரியார், காமராஜர் சிலைகளுக்கு அவர் மரியாதை செலுத்தியதுடன், கட்சிக் கொடியையும் ஏற்றி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. பேரவைத் தேர்தலை முன்னிட்டு கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள், உறுப்பினர் சேர்க்கை மற்றும் தொகுதி வாரியான பணிகள் குறித்து இந்த கூட்டத்தில் விஜய் முக்கிய அறிவிப்புகளை வெளியிட வாய்ப்புள்ளதாக கட்சியினர் எதிர்பார்க்கின்றனர்.

முன்னதாக வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், 2026 சட்டமன்றத் தேர்தல் களம் புதிய சூழலைச் சுமந்து நிற்கிறது எனவும், ஆட்சிபீடத்தை கைக்கொள்ளும் ஜனநாயக இலக்கை உறுதியாக வெல்வோம் என்றும் விஜய் தெரிவித்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!