இரட்டை பாண்டாக்கள் சீனா திரும்பின... பொதுமக்கள் கண்ணீர் மல்க பிரியாவிடை!
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள யூனோ உயிரியல் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை இரட்டை பாண்டாக்கள் விடைபெறும் நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் உணர்ச்சிபூர்வமாக கலந்துகொண்டு, கடைசியாக பாண்டாக்களை காணும் வாய்ப்பில் சுமார் 3.5 மணிநேரம் வரிசையில் காத்திருந்து கண்ணீர் மல்க பிரியாவிடை அளித்தனர்.
சீன அரசு தனது ‘பாண்டா’ அரசியல் கொள்கையின் கீழ் பிற நாடுகளுடன் நல்ல உறவை வளர்க்க பாண்டாக்களை கடனாக வழங்கி வருகிறது. இருப்பினும், வெளிநாடுகளில் பிறக்கும் குட்டிகள் உள்பட அனைத்து பாண்டாக்களின் உரிமையும் சீனாவுக்கே சொந்தம். ஒப்பந்தம் முடிவடைந்ததால், ஜப்பானில் இருந்த இரட்டை பாண்டாக்கள் சீனாவிற்கு திரும்பினர். பாண்டாக்களை பராமரிப்பதற்காக ஜப்பான் போன்ற நாடுகள் ஆண்டுதோறும் சுமார் 10 லட்சம் டாலர் சீனாவுக்கு வழங்கி வந்ததாகும்.
1972-இல் ஜப்பான்-சீனா இருதரப்புச் உறவு இயல்புநிலைக்கு வந்த பிறகு, ஜப்பானில் பாண்டா இல்லாத சூழல் இதுவே முதல்முறையாக உருவாகியது. தைவான் தொடர்பான வன்முறை நடவடிக்கைகள் மற்றும் அரசியல் முரண்பாடுகள் காரணமாக, எதிர்காலத்தில் சீனாவிடமிருந்து ஜப்பானுக்குப் புதிய பாண்டாக்கள் பெறும் வாய்ப்பு குறைவாக இருக்க வாய்ப்பு உள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!