undefined

சாலை விபத்தில் இருவர் பலி... முதல்வர் ஸ்டாலின் ரூ3 லட்சம் நிதியுதவி! 
 

 

தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம், காயார் கிராமத்தில் வசித்து வந்தவர் திரு.ஹரிதாஸ் . ஏப்ரல் 1ம் தேதி தனது மனைவி சுகந்தி , மூத்த மகன் லியோ டேனியல் (வயது 11) மற்றும் இளைய மகன் ஜோ.டேனியல் (வயது 5) ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் காயார் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்குச் சென்றார்.

வீட்டுக்கு திரும்பும் திரும்பும் வழியில் காப்பு காட்டு வளைவின் அருகில் கேளம்பாக்கத்தில் இருந்து காயார் கிராமத்தை நோக்கி எதிர் திசையில் வந்த நான்கு சக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக திடீரென மோதியது. இந்த விபத்தில் திரு.ஹரிதாஸ் மற்றும் அவரது மூத்த மகன் செல்வன்.லியோ டேனியல் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

 திருமதி.சுகந்தி மற்றும் செல்வன்.ஜோ டேனியல் இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் திருமதி.சுகந்தி சிகிச்சை பலனின்றி 2.4.2025 அன்று அதிகாலை உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3லட்சமும், காயமடைந்த சிறுவனுக்கு ஒரு இலட்சமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்” என பதிவிட்டுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?