இரு விமானங்கள் இறக்கைகள் உரசி விபத்து... பரபரப்பு வீடியோ!
மகாராஷ்டிர மாநிலம் மும்பை விமான நிலையத்தில் இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா நிறுவன விமானங்களின் இறக்கைகள் உரசி செவ்வாய்க்கிழமை சிறு விபத்து ஏற்பட்டது. ஹைதராபாதில் இருந்து மும்பைக்கு வந்த இண்டிகோ நிறுவனத்தின் 6இ791 விமானமும், மும்பையில் இருந்து கோவைக்கு புறப்பட நகர்ந்து கொண்டிருந்த ஏர் இந்தியா நிறுவனத்தின் ஏஐ2732 விமானமும் இந்த சம்பவத்தில் தொடர்புடையவை.
இந்த விபத்து நேரத்தில் இரு விமானங்களிலும் பயணிகள் இருந்தனர். இருந்தாலும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவத்துக்குப் பிறகு பயணிகள் பாதுகாப்பாக விமானங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர் என்று இரு விமான நிறுவனங்களும் உறுதிப்படுத்தின.
இதைத்தொடர்ந்து இரு விமானங்களிலும் தொழில்நுட்ப சோதனைகள் தொடங்கப்பட்டு பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சம்பவம் குறித்து முதல் கட்ட விசாரணை நடத்த விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் மும்பை விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். முழுமையான விசாரணைக்கு விரைவில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!