undefined

தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகள்... இன்று முதல் ஆன்லைன் விண்ணப்பம்!

 

புதிய பாடத்திட்டத்தின் கீழ் பிப்ரவரியில் நடைபெற உள்ள தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் மற்றும் அரசு கணினி சான்றிதழ் தேர்வுகளுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த தேர்வுகள் பாரம்பரிய முறையிலும், கணினி வழி முறையிலும் நடத்தப்பட உள்ளன.

பாரம்பரிய முறையிலான சுருக்கெழுத்து தேர்வு பிப்ரவரி 7 மற்றும் 8-ந்தேதிகளிலும், கணக்கியல் தேர்வு 9-ந்தேதியிலும் நடைபெறுகிறது. தட்டச்சு தேர்வுகள் பிப்ரவரி 14 மற்றும் 15-ந்தேதிகளில் நடக்கின்றன. கணினி வழி தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் COA தேர்வுகள் பிப்ரவரி 23 முதல் ஏப்ரல் 20 வரை நடைபெறும்.

இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கி ஜனவரி 19-ந்தேதி முடிவடைகிறது. தேர்வர்கள் https://tndtegteonline.in/ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தேர்வு முடிவுகள் ஏப்ரல் 30-ந்தேதி வெளியாகும். தேர்ச்சி பெற்றவர்கள் மே 27 முதல் டிஜிட்டல் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!