U19 ஆசிய கோப்பை கிரிக்கெட்... ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் இந்தியா?! - இன்று மலேசியாவுடன் மோதுகிறது!
துபாயில் பரபரப்பாக நடந்து வரும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான (இளையோர்) 12-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி இன்று தனது கடைசி லீக் ஆட்டத்தில் மலேசியாவைச் சந்திக்கிறது. ஏற்கனவே அரைஇறுதியை உறுதி செய்துவிட்ட இந்திய அணி, இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடர்ச்சியாக மூன்றாவது வெற்றியைப் (ஹாட்ரிக்) பதிவு செய்யக் குறிவைக்கிறது.
🇮🇳 இந்தியாவுக்குச் சாதகமானச் சூழல்
'ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, இந்தப் போட்டியில் இதுவரை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பாகிஸ்தான் அணிகளை அடுத்தடுத்து வீழ்த்தி, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறுவதைத் திட்டவட்டமாக உறுதி செய்துள்ளது. இந்தியா - மலேசியா அணிகள் மோதும் இந்த ஆட்டம் இன்று காலை 10.30 மணிக்கு (இந்திய நேரம்) தொடங்குகிறது. அதே சமயம், முதல் இரண்டு ஆட்டங்களிலும் தோல்வியைத் தழுவிய மலேசிய அணி, ஆறுதல் வெற்றியைப் பெற முயற்சிக்கும்.
பரபரப்பான இரண்டாவதுப் போட்டி
'ஏ' பிரிவில் இன்று நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில், அரைஇறுதிக்கு முன்னேறும் இரண்டாவது அணியைத் தீர்மானிக்கும் முக்கியப் போட்டி நடக்கவுள்ளது. பாகிஸ்தான் - ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதும் இந்தப் போட்டி மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தப் பிரிவில் இவ்விரு அணிகளும் தலா ஒரு வெற்றி மற்றும் ஒரு தோல்வியுடன் இருப்பதால், இன்றையப் போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக அரைஇறுதிக்கு முன்னேறும்.
பி பிரிவில் அரை இறுதிக்கு நுழைந்த அணிகள்
இதற்கிடையில், 'பி' பிரிவில் நடந்தப் போட்டிகளில் இலங்கை மற்றும் வங்காளதேச அணிகள் தலா 2 வெற்றிகளைப் பெற்று அரைஇறுதியை உறுதி செய்துள்ளன. இலங்கை அணி, ஆப்கானிஸ்தானை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது. வங்காளதேச அணி நேபாளத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் பந்தாடி இரண்டாவது வெற்றியைப் பெற்றது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!