யு19 உலகக் கோப்பை... சூப்பர் 6 ல் இந்தியா இன்று களமிறக்கம்!
16-வது யு19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வே, நமிபியாவில் நடைபெற்று வருகிறது. 16 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் லீக் சுற்று முடிவில் 12 அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெற்றன. குரூப் 2-ல் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், வங்காளதேசம், நியூசிலாந்து, ஜிம்பாப்வே அணிகள் இடம் பெற்றுள்ளன.
லீக் சுற்றில் இந்திய அணி நியூசிலாந்து மற்றும் வங்காளதேசத்தை வீழ்த்தியதால் அந்த வெற்றிக்கான புள்ளிகள் சூப்பர் 6 சுற்றிலும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. விதிப்படி இந்திய அணி ஜிம்பாப்வே மற்றும் பாகிஸ்தான் அணிகளுடன் மட்டுமே மோத வேண்டும். இதனால் இன்றைய போட்டி இந்தியாவுக்கு முக்கியமானதாக அமைந்துள்ளது.
ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இந்திய அணி இன்று புலவாயோவில் ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்கிறது. போட்டிக்கான டாஸ் போடப்பட்டதில் இந்திய அணி வெற்றி பெற்றது. டாஸ் வென்ற கேப்டன் ஆயுஷ் மாத்ரே பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!