வட சென்னையில் ரூ.18.24 கோடியில் புதிய துணை மின்நிலையம் - உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்!
வட சென்னையை வளர்ந்த சென்னையாக மாற்றும் தமிழக அரசின் தொலைநோக்குப் பார்வையில் மற்றுமொரு மைல்கல்லாக, பிராட்வே டேவிட்சன் சாலையில் புதிய 33/11 கி.வோ. துணை மின்நிலையம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி செயல்படுத்தப்பட்டு வரும் 'வட சென்னை வளர்ச்சித் திட்டத்தின்' ஒரு பகுதியாக இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகத்தின் சார்பில் சுமார் ரூ.18.24 கோடி மதிப்பீட்டில் இந்தத் துணை மின்நிலையம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
பிராட்வே மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் சுமார் 15,000-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இந்த புதிய மின்நிலையம் மூலம் நேரடியாகப் பயன்பெறும். குறிப்பாக மண்ணடி மற்றும் சவுக்கார்பேட்டை, கொத்தவால் சாவடி மற்றும் முத்தையால் பேட்டை, என்.எஸ்.சி போஸ் ரோடு மற்றும் ஏழு கிணறு பகுதிகளில் தடையற்ற மின்சாரம் உறுதி செய்யப்படும்:
இந்தத் துணை மின்நிலையம் செயல்பாட்டிற்கு வந்துள்ளதால், அப்பகுதியில் நிலவி வந்த குறைந்த மின்னழுத்தப் பிரச்சினைகள் (Low Voltage) இனி முழுமையாகத் தவிர்க்கப்படும். மேலும், ஏற்கனவே அதிக மின்பளுவுடன் இயங்கி வந்த கிழக்கு ஜார்ஜ் டவுன், பூக்கடை மற்றும் உயர்நீதிமன்ற துணை மின்நிலையங்களின் பணிச்சுமை குறைக்கப்பட்டு, சீரான மின் விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திறப்பு விழாவில் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, சென்னை மேயர் ஆர். பிரியா மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
வட சென்னை மக்களின் நீண்ட கால கோரிக்கையான தடையற்ற மின்சாரத்தை வழங்க இந்தத் திட்டம் ஒரு தீர்வாக அமையும் எனத் துணை முதல்வர் தனது சமூக வலைதளப் பதிவில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!