யூஜிசி விதிகள் வரவேற்கத்தக்கது… மு.க.ஸ்டாலின் கருத்து!
UGC சமத்துவ ஊக்குவிப்பு விதிகள் 2026 தாமதமாக வந்தாலும், உயர்கல்வி அமைப்பை சீரமைக்கும் முக்கிய முயற்சி என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாகுபாடு மற்றும் அக்கறையின்மையால் பாதிக்கப்பட்ட கல்வி சூழலை மாற்றவே இந்த விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறினார். குறிப்பாக பட்டியல் மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு எதிரான அநீதிகளை குறைப்பதே இதன் நோக்கம் என்றார்.
பாஜக ஆட்சிக்கு பிறகு உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் தற்கொலைகள் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். தென்னிந்திய மாநிலங்கள், காஷ்மீர் மற்றும் சிறுபான்மை மாணவர்கள் தொடர்ந்து தொல்லைகளுக்கு உள்ளாகி வருவதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் சமத்துவ பாதுகாப்பு விதிகள் அவசியமானவை என்றும், சாதி பாகுபாட்டை ஒழிக்கும் அம்சங்கள் பாராட்டத்தக்கவை என்றும் கூறினார்.
இந்த விதிகளுக்கு எதிரான போராட்டங்கள் பிற்போக்கு மனநிலையால் தூண்டப்பட்டவை என ஸ்டாலின் குற்றம்சாட்டினார். ஒன்றிய அரசு அழுத்தங்களுக்கு அடிபணிந்து விதிகளின் நோக்கத்தை நீர்த்துப் போகச் செய்யக்கூடாது என்றும் வலியுறுத்தினார். மாணவர் தற்கொலைகளைத் தடுக்கும் வகையில் இந்த விதிகளை மேலும் வலுப்படுத்தி நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!