நேட்டோ சர்ச்சை: "டிரம்ப் மன்னிப்பு கேட்க வேண்டும்" - இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் ஆவேசம்!

 

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்ற (WEF) மாநாட்டில் பங்கேற்ற டிரம்ப், நேட்டோ நாடுகள் குறித்துப் பேசிய கருத்துகள் ஐரோப்பிய நாடுகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான் போரில் அமெரிக்க வீரர்கள் மட்டுமே முன்களத்தில் நின்று போரிட்டதாகவும், நேட்டோ அமைப்பில் உள்ள பிற நாடுகளின் வீரர்கள் முன்களத்தில் இல்லாமல் சற்று விலகியே இருந்ததாகவும் டிரம்ப் விமர்சித்துள்ளார்.

அமெரிக்காவிற்கு நேட்டோ நாடுகளின் உதவி தேவையில்லை என்றும், இதுவரை அந்த நாடுகள் அமெரிக்காவிற்கு எந்தப் பலனையும் தரவில்லை என்றும் அவர் பேசியுள்ளார். டென்மார்க் வசமுள்ள கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றுவது உலகப் பாதுகாப்புக்கு அவசியம் என்றும், இதற்கு முட்டுக்கட்டை போட்டால் ஐரோப்பிய நாடுகள் மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார்.

டிரம்பின் இந்தக் கருத்துக்களை "அவமதிப்பானது" மற்றும் "அதிர்ச்சியளிக்கக்கூடியது" என்று இங்கிலாந்துப் பிரதமர் கீர் ஸ்டார்மர் சாடியுள்ளார். ஆப்கானிஸ்தான் போரில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 1,50,000 வீரர்கள் பங்கேற்றனர். இதில் 457 வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என்பதையும், பலர் வாழ்நாள் முழுவதும் ஆறாத காயங்களுடன் இருப்பவற்றையும் சுட்டிக்காட்டிய பிரதமர், அவர்களின் தியாகத்தைக் கொச்சைப்படுத்துவதை ஏற்க முடியாது எனத் தெரிவித்தார்.

இத்தகைய தவறான கருத்துக்களைக் கூறியதற்காக டிரம்ப் உடனடியாகப் பாதிக்கப்பட்ட வீரர்களின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஸ்டார்மர் வலியுறுத்தியுள்ளார். இளவரசர் ஹாரியும் (முன்னாள் ராணுவ ஹெலிகாப்டர் பைலட்) டிரம்பின் கருத்துக்கள் வீரர்களுக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பு என்று அதிருப்தி தெரிவித்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!