undefined

 நேட்டோவில் இணையும் முடிவை கைவிட உக்ரைன் தயார்: அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு!

 
 


ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்காக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தச் சூழலில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அளித்துள்ள பேட்டி ஒன்று உலக அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்தப் பேட்டியில், மேற்கத்திய நாடுகளிடமிருந்து உறுதியான பாதுகாப்பு உத்தரவாதங்களைப் பெற்றால், தாங்கள் நேட்டோ அமைப்பில் இணையும் முயற்சியைக் கைவிடத் தயாராக இருப்பதாக அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், "இருதரப்பு அமைதியையும், ரஷ்யா மீண்டும் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தாது என்பதற்கான உறுதியான பாதுகாப்பு உத்தரவாதங்களையும் உக்ரைன் விரும்புகிறது" என்றார். உக்ரைன் நகரங்கள் மற்றும் முக்கியமான உள்கட்டமைப்புகள் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் மூலம் ரஷ்யா வேண்டுமென்றே மோதலை நீடிக்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

இது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் ஏற்பட்ட மிக மோசமான போர் எனத் தெரிவித்த ஜெலன்ஸ்கி, பேச்சுவார்த்தை நடந்தாலும், ரஷ்யாவிடம் உக்ரைன் எந்த பிராந்தியத்தையும் விட்டுக்கொடுக்காது என்றும் உறுதியளித்துள்ளார். இந்தப் போரை நிறுத்துவதற்கு ரஷ்யாவின் முக்கியக் கோரிக்கையே, உக்ரைன் நேட்டோவில் சேரக் கூடாது என்பதுதான். இந்நிலையில், ஜெலன்ஸ்கியின் இந்த அறிவிப்பு அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஒரு புதிய திருப்புமுனையாக அமையலாம் என அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!