யூ.என் அலுவலகம் இடிப்பு… உலக நாடுகள் அதிர்ச்சி
கிழக்கு ஜெருசலேமில் செயல்பட்டு வந்த ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணிகளுக்கான அமைப்பின் தலைமை அலுவலகத்தை இஸ்ரேல் அரசு இன்று புல்டோசர்களால் இடிக்கத் தொடங்கியுள்ளது. அங்கு இருந்த ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை வெளியேற்றி, வளாகம் முழுவதும் ராணுவம் முற்றுகையிட்டதாக ஐ.நா. குற்றம்சாட்டியுள்ளது.
காஸா மற்றும் மேற்கு கரை பகுதிகளில் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு உணவு, மருந்து உள்ளிட்ட உதவிகளை இந்த அமைப்பு வழங்கி வருகிறது. ஆனால், ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக யூ.என்.ஆர்.டபள்யூ.ஏ. செயல்படுவதாக இஸ்ரேல் நீண்ட காலமாக குற்றம்சாட்டி வருகிறது. இதனைத் தொடர்ந்து அந்த அமைப்புக்கு எதிராக புதிய சட்டங்களையும் இஸ்ரேல் நிறைவேற்றியுள்ளது.
புதிய சட்டத்தின் அடிப்படையில்தான் இந்த இடிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் இது சர்வதேச சட்டங்களை மீறும் செயல் என ஐக்கிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென்-கிவிர் இதனை “வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நாள்” என கூறியது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!