undefined

  முதல்வர் ரோடு ஷோ பாதையில்  தூர்வாரப்படாத கால்வாய் துணியால் மறைப்பு... பொதுமக்கள் ஆதங்கம்!  

 

மதுரையில்  நாளை ஜூன் 1  திமுக பொதுக்குழுக் கூட்டம் முதல்வர்  ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. இந்நிலையில், இன்று மதுரையில்  ஸ்டாலின் மாலை நடைபெறும் பிரம்மாண்ட ரோடு ஷோவில் கலந்து கொண்டு பொதுமக்களை நேரில் சந்திக்கிறார்.  மதுரை பெருங்குடி முதல் ஆரப்பாளையம் வரை சுமார் 17 கி.மீ. தொலைவுக்கு ரோடு ஷோ நடக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.


பந்தல்குடி சாலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தரும் நிலையில், சாலையில் உள்ள சாக்கடை கழிவுகள் கலக்கும் பகுதி துணியால் மூடி வைக்கப்பட்டுள்ளது.  சுமார் 2 கி.மீ தூரத்திற்கு தூர்வாரப்படாத சாக்கடை கால்வாயை அதிகாரிகள் துணியால் மறைத்து வைத்திருப்பதாக  அப்பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர்.
அதாவது, முதல்வர் ஸ்டாலினின் ரோடு ஷோ நடக்கும் வழியில், அவரது கண்ணில் படாமல் இருக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக  மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.  மதுரை கலெக்டர் சங்கீதா இது குறித்து “கால்வாயை துணியால் மறைத்தது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும். கால்வாய் மறைக்கப்பட்ட விவகாரம் தற்போதுதான் எனக்கு தெரிய வந்துள்ளது” என  விளக்கம் அளித்துள்ளார்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது