undefined

நரபலி...?  நெடுஞ்சாலையில் 8 வயது சிறுவன்  கண்கள் பிடுங்கப்பட்டு  சடலமாக  மீட்பு!  

 
 

உத்தரப் பிரதேசம் பரேலி மாவட்டம் இஸ்ஸாத்நகர் பகுதியில், டெல்லி–லக்னோ தேசிய நெடுஞ்சாலையின் அருகே 8–9 வயது சிறுவனின் அடையாளம் தெரியாத சடலம் கண்டெடுக்கப்பட்டு பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் சிற்றுண்டிப் பொட்டலங்கள், பிஸ்கட்கள், சிறிய தலையணை மற்றும் போர்வையுடன் கூடிய எஃகுப் பெட்டியில் வைத்து பூட்டப்பட்டிருந்தது.

இச்சம்பவம் குறித்து பரேலி எஸ்.பி. மனுஷ் பரேக் கூறுவதாவது, “சிறுவன் கொடூரமாக கொலை செய்யப்பட்டு, இடது கண் கூர்மையான கருவியால் பிடுங்கப்பட்டுள்ளது” என்கிறார். இந்தக் கொடூரச் செயல், கடத்தல், பழிவாங்கல் அல்லது மாய மந்திரச் சடங்குகளுக்காக நடந்திருக்கலாம் .

.

பரேலி எஸ்.எஸ்.பி. அனுராக் ஆர்யா நான்கு தனிப்படைகளை அமைத்து விசாரணை தீவிரமாக நடத்தி வருகிறார். குற்றவாளிகள் வெளியூரைச் சேர்ந்தவர்கள் இருக்கக்கூடும் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, குழந்தைகள் காணாமல் போன புகார்களுடன் ஒப்பிட்டு இந்த வழக்கை ஆராய்ந்து வருகின்றனர். பிரேதப் பரிசோதனை முடிவுகளுக்குப் பிறகே மரணத்தின் சரியான காரணம் மற்றும் கொலையின் பின்னணி தெளிவாகும் என காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!