undefined

 வங்கதேச அரசுக்கு எதிராக ஜம்மு–காஷ்மீரில் கொந்தளிப்பு… ஹிந்து அமைப்புகள் தீவிர போராட்டம்!

 
 

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது தொடரும் தாக்குதல்களை கண்டித்து, ஜம்மு–காஷ்மீரில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தினர் மற்றும் ஹிந்து அமைப்புகள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். டிசம்பர் 18-ஆம் தேதி திபு சந்திர தாஸ் என்ற இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து வங்கதேச அரசுக்கு எதிரான கோஷங்கள் முழங்கின.

ரஜௌரி மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில், வங்கதேசம் மற்றும் ரோஹிங்கியா அகதிகளை ஜம்முவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற முழக்கங்கள் எழுந்தன. ஹிந்துக்கள் மீது நடக்கும் வன்முறைகளை தடுக்க பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனடியாக தலையிட வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். ஹிந்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதே முக்கிய கோரிக்கையாக முன்வைக்கப்பட்டது.

இதற்கிடையே, விஹெச்பி, பஜ்ரங் தல் உள்ளிட்ட அமைப்புகள் தனியாக போராட்டம் நடத்தின. வங்கதேச அரசின் இடைக்கால ஆலோசகர் முகமது யூனுஸின் உருவப் பொம்மை தீவைத்து எரிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவங்கள் ஜம்மு–காஷ்மீரில் பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!