அணுசக்தி துறை ஒத்துழைப்புக்கு தயார்... அமெரிக்கா பகிரங்க அரறிவிப்பு!
இந்தியாவில் அணுசக்தி துறையில் தனியார் மற்றும் அந்நிய முதலீடுகளுக்கு அனுமதி வழங்க ஒன்றிய அரசு சமீபத்தில் சட்டத் திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் நீண்ட காலமாக அரசின் கட்டுப்பாட்டில் இருந்த அணுசக்தி துறை புதிய பாதைக்கு நகர்கிறது. இந்த முடிவு சுத்த ஆற்றல் உற்பத்தியை அதிகரிக்க உதவும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த சட்டத் திருத்தங்களை அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக வரவேற்றுள்ளது. அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சாந்தி’ (Civil Nuclear Liability) மசோதா இரு நாடுகளுக்கும் இடையிலான அணுசக்தி ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என குறிப்பிட்டுள்ளது. புதிய கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
2008-ஆம் ஆண்டு இந்தியா–அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தத்திற்கு பின் இது ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. அணு உலைகள் கட்டுமானம், தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் புதிய தலைமுறை அணு திட்டங்களில் அமெரிக்க நிறுவனங்கள் பங்கு பெறும் வாய்ப்பு அதிகரிக்கலாம். இந்த ஒத்துழைப்பு இந்தியாவின் ஆற்றல் பாதுகாப்பையும், சர்வதேச அணுசக்தி சந்தையில் அதன் நிலையும் வலுப்படுத்தும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!