அமெரிக்கா குடியுரிமை விண்ணப்பத்திற்கு 19 நாடுகளுக்கு தடை... ட்ரம்ப் அடுத்த அதிரடி!
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பதவியேற்ற பின்னர், சட்டவிரோத குடியேற்றத்துக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். நாடு முழுவதும் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்படுவது தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த நிலையில், குடியுரிமை பெறுவதற்கான விண்ணப்பத்திலும் பெரிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
டிரம்ப் நிர்வாகம் புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டு, 19 நாடுகளின் குடிமக்கள் அமெரிக்க குடியுரிமைக்குத் விண்ணப்பிக்க முடியாது எனத் தடைவிதித்துள்ளது. இதில் ஆப்கானிஸ்தான், மியான்மர், சாட், காங்கோ குடியரசு, ஈக்வடோரியல் கினி, எரித்ரியா, ஹைதி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன், புரூண்டி, கியூபா, லாவோஸ், சியாரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான் மற்றும் வெனிசுலா உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளன.
இந்த உத்தரவு அமலுக்கு வந்துள்ள நிலையில், குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அமெரிக்க குடியுரிமை பெறும் பாதை முற்றாக மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!