அமெரிக்கா-இந்தியா வர்த்தக ஒப்பந்தம்... இறக்குமதி வரி 25%-இருந்து 18% ஆக குறைப்பு! 

 
 

அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கிடையேயான வர்த்தக பேச்சுவார்த்தைகளின் பின்புலத்தில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், இந்தியாவில் இருந்து வரும் இறக்குமதி வரியை 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதாக கூறினார்.  

இவ்வாறு வரி குறைப்பை அமெரிக்க அதிபர் தெரியப்படுத்தியதற்கு பின்னால், பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் நடந்த உரையாடல் காரணமாக இரு நாடுகளும் வர்த்தக ஒப்பந்தத்தில் சம்மதம் தெரிவித்தனர். இதன்படி இந்தியாவுக்கான வரி கட்டுப்பாடு மாற்றப்பட்டுள்ளதாகவும், ரஷிய எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் டிரம்ப் கூறியுள்ளார் 

இந்த மாற்றம் இந்திய பொருட்களின் அமெரிக்க சந்தையில் போட்டித் தகுதியை மேம்படுத்தும் நோக்கத்துடன் செயல்படுகிறது என்றும், இரண்டு நாடுகளின் வர்த்தக உறவை வலுப்படுத்தும் படியாக மதிப்பிடப்படுகிறது. மேலும் இந்தியா அமெரிக்கா இருந்து பெரும் அளவில் பொருட்களை வாங்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் கூறப்படுகிறது.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!