அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதலில் 3,375 பேர் பலி: ஈரான் அரசு அதிர்ச்சித் தகவல்!
ஈரான் நாட்டின் மீது கடந்த பிப்ரவரி 28 முதல் ஏப்ரல் 7 வரை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்திய பயங்கரமான வான்வழித் தாக்குதல்களில், இதுவரை 3,375 பேர் உயிரிழந்துள்ளதாக ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஈரானின் தடயவியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் அப்பாஸ் மஸ்ஜெதி ஆரானி இந்த எண்ணிக்கையை உறுதிப்படுத்தியுள்ளார்.உயிரிழந்தவர்களில் 2,875 ஆண்கள் மற்றும் 496 பெண்கள் அடங்குவர். குறிப்பாக, இந்தத் தாக்குதல்களில் ஈரான் மக்கள் மட்டுமின்றி ஆப்கானிஸ்தான், சிரியா, பாகிஸ்தான், சீனா, ஈராக் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினரும் பலியாகியுள்ளனர். நவீன தடயவியல் முறைகளைப் பயன்படுத்தி இந்த உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய இந்தப் போரில், ஈரானின் உயர்மட்டத் தலைவர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் பலர் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து ஈரான் தனது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் மூலம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கத் தளங்களைத் தாக்கிப் பதிலடி கொடுத்தது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதற்றம் நிலவி வந்த நிலையில், கடந்த வாரம் பாகிஸ்தான் தலையீட்டுடன் ஒரு தற்காலிகப் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
எனினும், கடந்த சனிக்கிழமை இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததால், மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்திப் பகுதியில் அமெரிக்கா கடற்படை முற்றுகையை அறிவித்துள்ள நிலையில், இந்த உயிரிழப்புத் தகவல்கள் சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் 940-க்கும் மேற்பட்ட பள்ளிகள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட மருத்துவ மையங்களும் சேதமடைந்துள்ளதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!