undefined

சர்வதேச போட்டிகளில் இருந்து உஸ்மான் கவாஜா திடீர் ஓய்வு...   கிரிக்கெட் ரசிகர்கள் ஷாக்  !  

 

 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ரன் மெஷின் உஸ்மான் கவாஜா, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியுடன் தனது கிரிக்கெட் பயணத்தை முடித்துக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார். 39 வயதான கவாஜா, கடந்த சில காலமாகவே ஓய்வு குறித்து சிந்தித்து வந்த நிலையில், தற்போது இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

இந்தியாவில் 2027-ல் நடக்கும் தொடர் வரை கவாஜா விளையாட வேண்டும் என்று பயிற்சியாளர் விரும்பியுள்ளார். ஆனால், தனது உள்ளுணர்வு சொல்வதை கேட்டு சிட்னி மைதானத்தில் சொந்த முடிவின்படி விடைபெறுவது மகிழ்ச்சி அளிப்பதாக கவாஜா உருக்கமாக தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் இடம்பிடித்த முதல் இஸ்லாமிய வீரர் என்ற பெருமைக்குரியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை 87 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கவாஜா, 6,206 ரன்களை குவித்து அசத்தியுள்ளார். இதில் 16 சதங்களும், 28 அரைசதங்களும் அடங்கும். டெஸ்ட் மட்டுமின்றி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணிக்காக பல வெற்றிகளை தேடிக்கொடுத்துள்ளார். ஒரு சகாப்தம் முடிவுக்கு வருவதால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வட்டாரத்திலும், உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் நெகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!