‘வா வாத்தியார்’ படக்குழு எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை!
கார்த்தி நடிப்பில் உருவான ‘வா வாத்தியார்’ படத்திற்காக ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்தனர். நலன் குமாரசாமி இயக்கிய இப்படம் பைனான்ஸ் பிரச்சினைகளால் ரிலீஸ் தள்ளிப்போனது. இது தொடர்பான வழக்கில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் ரூ.3 கோடி 75 லட்சம் டிடி செலுத்தியதை தொடர்ந்து, மீதி தொகை செலுத்தினால் பொங்கலுக்கு படம் வெளியாகலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ரிலீஸை முன்னிட்டு கார்த்தி, சத்யராஜ், ஆனந்த் ராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நினைவிடம் சென்று மரியாதை செலுத்தினர். அந்த புகைப்படங்களை கார்த்தி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!