undefined

வைகுண்ட ஏகாதசி... விரதமுறை, பலன்கள்!

 

மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசி வைகுண்ட ஏகாதசி என்றும், முக்கோடி ஏகாதசி என்றும் போற்றப்படுகிறது. இந்நாளில் விரதம் இருந்து பெருமாளை தரிசித்தால் சொர்க்கபதவி கிடைக்கும் என்பது பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கை. வைணவத் தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோவிலில் பகல்பத்து, இராப்பத்து விழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.

புராணக் கதைகளின்படி, நம்மாழ்வார் முக்தியடைந்த நாளில்தான் வைகுண்ட வாசல் திறக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. தன்னைத் தொடர்ந்து வரும் அடியவர்களுக்கும் அந்த வாயில் திறக்க வேண்டும் என நம்மாழ்வார் வேண்டியதையே வைகுண்ட ஏகாதசியாக கொண்டாடுகிறார்கள். அந்த நாளில் அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டு நம்பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலிப்பது சிறப்பு.

வைகுண்ட ஏகாதசியன்று இரவு முழுவதும் பரமபதம் விளையாடுவது, உபவாசம் இருப்பது போன்ற ஆன்மிக சம்பிரதாயங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. புண்ணியம் ஏணியாகவும், பாவம் பாம்பாகவும் விளங்கும் இந்த விளையாட்டு வாழ்வின் ஏற்றத் தாழ்வுகளை உணர்த்துகிறது. சாஸ்திரப்படி விரதம் இருந்து பெருமாளை வழிபடும் பக்தர்களுக்கு வைகுண்ட வாசல் நிச்சயம் திறக்கும் என்பது ஐதீகம்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!