undefined

கலிங்கப்பட்டி ஊராட்சிக்கு 'சமூக நல்லிணக்க ஊராட்சி விருது' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வைகோ நன்றி!

 

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டத்தில் அமைந்துள்ள, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டி ஊராட்சிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 'சமூக நல்லிணக்க ஊராட்சி விருது-2025' விருதை வழங்கிச் சிறப்பித்துள்ளார். இதற்காக முதலமைச்சருக்கு வைகோ தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துள்ளார்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், கலிங்கப்பட்டி கிராமம் சமத்துவத்தை நிலைநாட்டுவதற்கு ஓர் எடுத்துக்காட்டாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அதில், இக்கிராமத்தில் 18 சாதிகளைச் சேர்ந்த மக்கள் ஒற்றுமையாக வாழ்கின்றனர். 500 ஆண்டுகளில் ஒரு சிறு பிணக்கோ, சாதி, மத மோதலோ அங்கு வந்ததில்லை என்ற பெருமை கலிங்கப்பட்டிக்கு உண்டு.

இங்குள்ள மக்கள் அனைவருக்கும் ஒரே சமத்துவப் பொது மயானம் இன்று வரை பயன்பாட்டில் உள்ளது. இதற்காகத் தமிழ்நாடு அரசின் 'சமத்துவ மயான விருதை' இரண்டு முறை இந்தக் கிராமம் பெற்றுள்ளது. இந்த ஊராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. சுற்றுப்புறம் மிகவும் தூய்மையாக வைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கால்நடை மருத்துவமனை ஆகியவை சிறந்த முறையில் சேவையாற்றி வருகின்றன. இங்குள்ள மக்கள் எந்தக் கட்சியில் வேண்டுமானாலும் இருக்கலாம்; ஆனால் அதனால் ஊரில் அரசியல் சண்டையோ, சாதிச் சண்டையோ வந்துவிடக் கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் வைகோ தெரிவித்துள்ளார்.

இப்படிப்பட்டச் சிறப்புகளை உடைய கலிங்கப்பட்டி ஊராட்சிக்கு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் இந்த உயரிய விருதை வழங்கிச் சிறப்பித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த வைகோ, இந்த விருதைப் பெறும் அளவுக்குச் சிறப்பாகப் பணியாற்றிய ஊராட்சி மன்றத் தலைவர் மணிமொழி சந்துரு, ஊராட்சிச் செயலாளர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஒன்றிய கவுன்சிலருக்கும் தனது வாழ்த்துகளையும் பாராட்டையும் தெரிவித்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!