undefined

“என்னைத் தாங்கிப் பிடித்த தங்க தூண் சாய்ந்தது” ஏவிஎம் சரவணன் மறைவுக்கு வைரமுத்து இரங்கல்!

 

திரைப்படத் தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் அவர்களின் மறைவுக்குக் கவிஞர் வைரமுத்து அவர்கள் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் மிகவும் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 44 ஆண்டுகால நட்பை நினைவு கூர்ந்து, தனது துயரத்தைத் தாங்கிக்கொள்ளக் காலமே கைகொடுக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

கவிஞர் வைரமுத்துவின் இரங்கல் பதிவில், மதிப்புக்குரிய ஏவி.எம்.சரவணன் இயற்கை எய்திவிட்டார். இன்று என் அதிகாலையின் இருள் வடியவே இல்லை என்று குறிப்பிட்ட வைரமுத்துவின் இரங்கல் பதிவு பின்வருமாறு:

"என்னசொல்லிப் புலம்புவது? 44 ஆண்டுகால நட்பு காலமாகிவிட்டது என்று கலங்குவேனா? ஏவி.எம்மின் அடையாளம் போய்விட்டதே என்று வருந்துவேனா?

ஆயிரம் பறவைகளுக்குக் கனி கொடுத்த கலை ஆலமரத்தின் கிளை முறிந்ததே என்று வாடுவேனா? திரையுலகில் என்னைத் தாங்கிப்பிடித்த ஒரு தங்கத் தூண் சாய்ந்துவிட்டதே என்று கலங்குவேனா?

கலையுலகில் எங்களது சந்திப்பு மையம் வெறிச்சோடிவிட்டதே என்று விசும்புவேனா? நண்பர் சகோதரர் வழிகாட்டி இனி யார் உண்டு என்று தவிப்பேனா? தமிழ்த் திரையுலகின் வரலாறு சொல்லும் ஆசிரியர் மறைந்துவிட்டாரே என்று பதைப்பேனா?

எனது மகா ரசிகர். ஏவி.எம் நிறுவனத்தில் அதிகமான பாடல் எழுதிய கவிஞர் என்ற அருமையான பெருமையை எனக்களித்தவர். எல்லாராலும் மதிக்கப்பட்ட வெள்ளுடை ஆளுமை. கையொடிந்து தவிக்கிறது இன்று கலையுலகம்.

அவரை இழந்துவாடும் குடும்பத்தார்க்கும் கலையுலகத்துக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன். அவர் நினைவுகள் நீடு வாழும். என் ஆறாத்துயரம் ஆறுவதற்குக் காலமே கைகொடு." என்று தெரிவித்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!