undefined

வேலண்டைன்ஸ் டே - தமிழகத்தில் பூக்களின் விலை 4 மடங்கு உயர்வு!

 

இன்று பிப்ரவரி 14ம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படும் நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை முதலே காதலர் வாரம் என்று காதலர்கள் தங்களது கொண்டாட்டங்களைத் துவங்கி விட்டனர். இந்நிலையில் ரோஜாப் பூக்களின் விலை 4 மடங்கு வரையில் திடீரென உயர்ந்துள்ளது. இந்தியாவில் இருந்து உலகின் பிற பகுதிகளுக்கும் ரோஜாக்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

காதலர்கள் தங்களது அன்பை வெளிப்படுத்தும் வகையில் ரோஜாப்பூக்கள், வாழ்த்து அட்டைகள், சாக்லெட்,  பொம்மைகள், மொபைல் போன்கள் மற்றும் விதவிதமான பரிசு பொருட்களை வாங்கி பரிசளித்து வருகின்றனர்.மாறி வரும் இன்றைய சூழ்நிலையில் செல்போன் மூலம் வாட்ஸ் அப், முகநூல், இன்ஸ்டா உட்பட சமூக வலைதளங்கள் மூலம் காதலர் தின குறுஞ்செய்தி, புகைப்படங்களை அனுப்பிக் கொள்கின்றனர்.

இருந்தாலும் ரோஜாவுக்கான மவுசு இன்னும் குறையவே இல்லை. ரோஜாப்பூ மற்றும் வாழ்த்து அட்டைகளை கொடுப்பது இப்போதும் பெருமையானதாகவே   கருதப்படுகிறது. இதனையடுத்து காதலர் தினத்தில் ரோஜா பூக்கள் விலை உச்சத்தில் இருக்கும்.  காதலர் தினத்திற்காக  ஓசூரில் இருந்து கொண்டுவரப்பட்டு பல விதமான வண்ணங்0களில் ரோஜா பூக்கள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டு உள்ளன.

மேலும் காதலர்களுக்கு பிடித்தமான நிறங்களை அவர்கள் தேர்வு செய்யும் வகையில் ரோஜா பூக்கள் மீது வண்ண நிற ஸ்பிரே அடித்து அதன் புத்துணர்ச்சியை நீடிக்க வைக்கின்றனர் விற்பனையாளர்கள் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக இந்த தந்திரத்தை உபயோகப்படுத்துகின்றனர்.

எல்லா வண்ணங்களிலும் ரோஜா பூக்கள் கிடைப்பதால் இதை காதலர்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். பனி தாக்கம் அதிகமாக இருப்பதால் இந்த ஆண்டு ரோஜா பூக்கள் வரத்து குறைந்துள்ளது. காதலர் தினத்தையொட்டி தேவை அதிகரிப்பு காரணமாக ரோஜா பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!