undefined

 காதலர் தினத்தில் சொகுசு கார் பரிசு... மனைவி மறுத்ததால்  குப்பையில் வீசி சென்ற கணவன்!  

 
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில்  மைடிச்சியில், காதலர் தினத்தில் மனைவிக்கு பரிசாக போர்ஷே மெக்கானை காரை  பரிசளித்தார். அந்த பரிசை அவரது மனைவி நிராகரித்து  காரை குப்பைத் தொட்டியில் வீசிவிட்டார். இச்சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இவர்களின் திருமணத்திற்கு பிறகு கருத்து வேறுபாடு காரணமாக  அடிக்கடி தகறாறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் மனைவியை சமாதானப்படுத்த காதலர் தின பரிசாக  ரூ. 27 லட்சம் மதிப்புள்ள போர்ஷே மெக்கானை காரை பரிசளிக்க எண்ணினார்.  அந்த வாகனம் முன்பு ஒரு விபத்தில் சிக்கி சேதமடைந்தது. ஆரம்பத்தில், அந்த நபர் காரை சரிசெய்து மார்ச் 8 ம் தேதி சர்வதேச மகளிர் தினத்தன்று தனது மனைவிக்கு பரிசளிக்கலாம் என யோசித்தார். ஆனாலும்  பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தில்  அதிகாலையில் அவளை ஆச்சரியப்படுத்த முடிவு செய்தார், விரைவில் முழுமையாக பழுதுபார்த்து தருவதாக உறுதியளித்தார்.


சிவப்பு ரிப்பனால் சுற்றப்பட்ட சேதமடைந்த காரைப் பார்த்த மனைவி,  தன் கணவர் தன்னை  அவமானப்படுத்தியதாக உணர்ந்தார். இதனால் பரிசை அவர் மறுத்து விட்டார். தனது முயற்சி தோல்வியில் முடிந்ததை உணர்ந்த கணவன், ஆத்திரமடைந்து போர்ஷே மெக்கான் காரை ஒரு பெரிய குப்பைத் தொட்டியில் வீசி சென்றுவிட்டார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?