undefined

காதலர் தினம்... ரெட் ரோஸ் விலை 20 ஆண்டுகளில் இல்லாத விலை உயர்வு - ஒரு பூ ரூ.55-க்கு விற்பனை!

 

இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படும் நிலையில், ரெட் ரோஸ் விலை கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், பாகலூர், பேரிகை மற்றும் தளி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2,000 முதல் 4,000 ஏக்கர் பரப்பளவில் பசுமைக் குடில்களில் ரோஜா சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

காதலர் தினக் கொண்டாட்டங்களுக்கான தேவையை ஈடுகட்ட, ஓசூரில் இருந்து நாள்தோறும் சுமார் 10 லட்சம் ரோஜா மலர்கள் டெல்லி, மும்பை, பெங்களூரு போன்ற பெருநகரங்களுக்கும், கேரளா போன்ற அண்டை மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. காதலர் தின சந்தையில் 80 சதவீதத்திற்கும் மேலான ஆர்டர்களைக் குவித்து, அடர் சிவப்பு நிற 'தாஜ்மகால்' ரக ரோஜாக்கள் முதலிடம் பிடித்துள்ளன. இந்த ஆண்டு உற்பத்தி குறைவு மற்றும் அதிகத் தேவை காரணமாக, ரோஜா பூக்களின் விலை வரலாறு காணாத நிலையை எட்டியுள்ளது.

ஏற்றுமதி தரம் கொண்ட ஒரு ரோஜா பூவின் விலை பண்ணையிலேயே ரூ.50 முதல் ரூ.55 வரை விற்பனையாகிறது. இது கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத உச்சபட்ச விலையாகும். சென்னை போன்ற நகரங்களில் ஒரு ரோஜா பூவின் விலை சில்லறை விற்பனையில் ரூ.100 வரை எட்ட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. 20 பூக்கள் கொண்ட ஒரு கட்டு ரோஜா, சந்தை நிலவரப்படி ரூ.650 முதல் ரூ.1,100 வரை உயர்ந்துள்ளது.

சமீபகாலமாகச் சர்வதேச விமானக் கட்டண உயர்வு மற்றும் கடும் போட்டி காரணமாக, விவசாயிகள் வெளிநாட்டு ஏற்றுமதியை விட உள்நாட்டு ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். துபாய், குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகள், ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு இதுவரை சுமார் 20 லட்சம் மலர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. விலை உயர்ந்திருந்தாலும், இந்த ஆண்டு விளைச்சல் எதிர்பார்த்த அளவு இல்லை.

கடும் பனிப்பொழிவு மற்றும் குளிர்காலப் பருவநிலை மாற்றம் காரணமாக ரோஜா உற்பத்தி சுமார் 35% முதல் 45% வரை சரிந்துள்ளது. வழக்கமாக ஒரு கோடி மலர்கள் உற்பத்தியாகும் இடத்தில், இந்த ஆண்டு சுமார் 60 முதல் 70 லட்சம் மலர்கள் மட்டுமே கிடைத்துள்ளன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!