undefined

 வளைகாப்புக்கு சென்ற போது   லாரியை முந்த முயன்ற வேன் கவிழ்ந்து விபத்து... 6 பேர் படுகாயம்!

 

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று ஒரு பயங்கர விபத்து நிகழ்ந்தது. வளைகாப்பு நிகழ்ச்சி ஒன்றிற்காக 15 பேர் ஒரு டிராவல்ஸ் வேனில் சென்று கொண்டிருந்தனர். அப்போது முன்னால் சென்ற லாரியை அந்த வேன் அதிவேகமாக முந்திச் செல்ல முயன்றுள்ளது. இதில் எதிர்பாராத விதமாக லாரியின் மீது உரசிய வேன், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டிலேயே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் வேனில் பயணம் செய்தவர்களில் 6 பேர் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். நடுரோட்டில் கவிழ்ந்து கிடந்த வேன், கிரேன் உதவியுடன் அப்புறப்படுத்தப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மகிழ்ச்சியாக வளைகாப்பு நிகழ்ச்சிக்குச் சென்ற போது இப்படி ஒரு விபத்து நேர்ந்தது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிவேகமாக முந்திச் செல்ல முயன்றதே இந்த விபத்திற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வளைகாப்பு விசேஷம் மருத்துவமனை சிகிச்சையாக மாறிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!