திருப்பரங்குன்றம் விவகாரம்: முதல்வருக்கு வானதி சீனிவாசன் கேள்வி!
திருப்பரங்குன்றம் மலைப் பகுதியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான மதுரை உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவைச் செயல்படுத்துவது குறித்து, தமிழக முதல்வர் பதிலளிக்க வேண்டும் என்று பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் நேற்று (வியாழக்கிழமை) அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழக முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் இரண்டு கேள்விகளை முன்வைத்துள்ளார்: "திருப்பரங்குன்றத்தில் இருப்பது கந்தனின் குன்றமா? அல்லது சிக்கந்தர் குன்றமா?"
"இந்து சமய அறநிலையத் துறை (HR&CE) கோயில்களின் பாதுகாப்பு, பராமரிப்பு, இந்துக்களின் வழிபாட்டுக்கான துறையா? அல்லது அரசின் கொள்கை முடிவுகளை நிறைவேற்றுகின்ற துறையா?" இந்தக் கேள்விகளுக்கு ஒரு வரியில் முதலமைச்சரின் பதிலை எதிர்பார்ப்பதாக அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!