பள்ளி செல்லும் மாணவன் பேண்ட் பாக்கெட்டில் கஞ்சா பொட்டலம்?... வானதி சீனிவாசன் அதிர்ச்சி!
சென்னை வியாசர்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பதினோறாம் வகுப்பு படிக்கும் மாணவன் தனது பேண்ட் பாக்கெட்டில் கஞ்சா பொட்டலம் மறைத்து கொண்டுவந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கையில், கல்விக் கூடங்களை மதுக்கூடங்களாகவும், கஞ்சா நிலையங்களாகவும் மாற்றி மாணவச் சமுதாயத்தை சீரழித்து வைக்கும் திமுக ஆட்சியின் நடவடிக்கைகள் அவலமானதாக உள்ளன எனவும், பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
வானதி சீனிவாசன் மேலும் கூறியதாவது, கஞ்சா தடுப்பு நடவடிக்கைகள், கள்ளச்சாரயம் ஒழிப்பு நடவடிக்கைகள் வெறும் பெயரளவுக்கே மட்டும்தான் நடைபெறுவதாகக் குறிப்பிட்டு, மாணவர்கள் நலனில் அக்கறை காட்ட வேண்டிய அரசு இன்று அவர்களை போதையின் பாதையில் மாற்றி சமூகக் குற்றவாளிகளாக மாற்றி வைக்கிறது என தெரிவித்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!