அடுத்த மாதம் ராமேஸ்வரம் சென்னை இடையே வந்தே பாரத் ரயில்!
ராமேசுவரம் ரயில் நிலையத்தில் ரூ.90.20 கோடி மதிப்பில் மேம்பாட்டு பணிகள் 2022 மே மாதம் முதல் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், ராமேசுவரம் ரயில் நிலையம் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட நிலையமாக மாற்றப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
பயணிகளுக்கான வாகன நிறுத்துமிடம், குளிரூட்டப்பட்ட ஓய்வறை, உணவகம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் அமைக்கப்படும் என கூறப்பட்டது. இன்னும் ஒன்றரை மாதங்களில் பணிகள் நிறைவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், ராமேசுவரத்தில் இருந்து அடுத்த மாதம் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. பாம்பன் கடலில் உள்ள பழைய ரயில் பாலத்தின் இரும்பு தூக்குப் பகுதியை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. ராமேசுவரம் - தனுஷ்கோடி இடையே ரயில் பாதை அமைப்பதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்த பின் பணிகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!