undefined

 தென்மாநில பிரதிநிதிகள்   ‘கூட்டு நடவடிக்கை குழு'விற்கு விசிக வரவேற்பு... திருமாவளவன் மகிழ்ச்சி!

 

தமிழகத்தில் சென்னை தலைமைச் செயலகத்தில், தொகுதி மறுசீரமைப்பு குறித்து முதல்வர்  ஸ்டாலின் தலைமையில், அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட்டது.  இந்த கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, விசிக, மக்கள் நீதி மய்யம் உட்பட  பல்வேறு அரசியல் கட்சிகளை சார்ந்த பிரமுகர்கள் கலந்துகொண்டனர். தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் கலந்துகொண்டார். 

தென்னிந்திய மாநில பிரதிநிதிகள் அடங்கிய “கூட்டு நடவடிக்கை குழு” அமைப்பதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்,  தென்னிந்திய மாநில பிரதிநிதிகள் அடங்கிய ‘கூட்டு நடவடிக்கை குழு'வை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்பதாக  அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்ற பிறகு பேசிய திருமாவளவன், தொகுதி மறுவரையறையில் தலித், சிறுபான்மையினர் வாக்குகளை சிதறடிக்கும் நடவடிக்கை இருக்கக் கூடாது  அமெரிக்காவில் இருப்பது போல அனைத்து மாநிலங்களிலும் சம எண்ணிக்கையில் உறுப்பினர்களை அளிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?