undefined

  காதலியை கரம் பிடித்தார் பாடகர் வேடன்!

 

மலையாள திரையுலகின் பிரபல ராப் பாடகரான வேடன் தனது நீண்ட நாள் காதலியைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். சமூக அநீதிகள் மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிராக பாடல்கள் மூலம் குரல் கொடுத்து வரும் இவருக்கு தனி ரசிகர் வட்டாரம் உள்ளது. சுயாதீன பாடகராக மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் பாடி வருகிறார்.

தமிழில் பைசன் திரைப்படத்தில் இடம்பெற்ற “காளமாடன்” பாடலைப் பாடி கவனம் பெற்றிருந்தார். தனித்துவமான குரலும், சமூக உணர்வுள்ள வரிகளும் இவரை மேலும் பிரபலமாக்கியது.இந்த நிலையில், எழுத்தாளரான நவமி லதாவை பிப். 24ஆம் தேதி பதிவுத் திருமணம் செய்து கொண்டார். புதிய தம்பதிக்கு ரசிகர்களும் திரையுலகினரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!