நடுரோட்டில் பற்றி எரிந்த கார்: மனைவியுடன் சாப்பிடச் சென்றவருக்கு நேர்ந்த பயங்கரம்!
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கரசமங்கலத்தைச் சேர்ந்த தமீம் அன்சாரி என்பவர், தனது மனைவியுடன் இரவு உணவிற்காக வேலூர் நோக்கி காரில் சென்றபோது எதிர்பாராத விதமாகக் கார் தீப்பிடித்து எரிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் சிஎம்சி மருத்துவமனை அருகே உள்ள காமராஜர் சிலை பகுதியை அவர்கள் கடக்க முயன்றபோது, காரின் முன்பகுதியில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியுள்ளது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த தமீம் அன்சாரி, உடனடியாக காரைச் சாலையிலேயே நிறுத்திவிட்டுத் தனது மனைவியைப் பத்திரமாக வெளியே அழைத்து வந்துள்ளார்.
அடுத்த சில நிமிடங்களிலேயே காரின் முன்பகுதி முழுவதும் தீப்பிடித்து எரியத் தொடங்கியதால் அந்தப் பகுதியே புகை மண்டலமாகக் காட்சியளித்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேலூர் தீயணைப்புத் துறையினர், சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாகப் போராடித் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதிர்ஷ்டவசமாகத் தம்பதியினர் இருவரும் காயமின்றித் தப்பிய நிலையில், கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இந்த விபத்து காரணமாக வேலூர் மாநகரின் முக்கியச் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்தத் தீ விபத்து குறித்து வேலூர் வடக்கு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காரின் இயந்திரப் பகுதியில் ஏற்பட்ட மின் கசிவு அல்லது வெப்பம் காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மருத்துவமனைப் பகுதியில் இந்தச் சம்பவம் நடந்ததால் அங்கு சிறிது நேரம் பெரும் பதற்றம் நிலவியது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!