ரஷ்யாவுக்கு பதில் வெனிசுலாவில் எண்ணெய் வாங்குங்க... இந்தியாவுக்கு அமெரிக்கா யோசனை!
ரஷ்ய கச்சா எண்ணெய்க்கு பதிலாக வெனிசுலா எண்ணெயை இந்தியா வாங்க வேண்டும் என்று அமெரிக்கா பரிந்துரை செய்துள்ளது. இந்தியா–ரஷ்யா இடையேயான எண்ணெய் வர்த்தகம் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. வெனிசுலா எண்ணெய் இறக்குமதி ரஷ்யாவுக்கு அழுத்தம் தரும் என அமெரிக்கா கருதுகிறது.
இந்த நிலையில், நேற்று வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மடூரோவுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசினார். இரு நாடுகளுக்கிடையேயான உறவுகள், வர்த்தகம், எண்ணெய் இறக்குமதி குறித்து பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது. இதன் பின்னணியில், இந்தியா விரைவில் வெனிசுலா எண்ணெய் வாங்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேற்கத்திய தடைகளால் ரஷ்ய எண்ணெய் குறைந்த விலையில் கிடைப்பதால் இந்தியா பெருமளவில் இறக்குமதி செய்து வருகிறது. ஆனால் அமெரிக்காவின் இந்த பரிந்துரை புதிய சவாலாக பார்க்கப்படுகிறது. இந்தியா எடுக்கும் முடிவு, ரஷ்யா, அமெரிக்கா, வெனிசுலா உறவுகளில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!