undefined

நான் தான்  ‘வெனிசுவேலா செயல் அதிபர்’ ... வைரலாகும்  டிரம்ப்  புகைப்படம் !  

 
 

 

‘வெனிசுவேலாவின் செயல் அதிபர் டொனால்ட் டிரம்ப்’ என எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். விக்கிபீடியா பக்க வடிவில் தயாரிக்கப்பட்ட அந்த புகைப்படம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வெனிசுவேலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப் பொருள் கடத்தப்படுவதாக குற்றம்சாட்டி, ஜனவரி 3-ஆம் தேதி அமெரிக்கா அந்த நாட்டில் படையெடுத்தது. அதனைத் தொடர்ந்து அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்டு அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இருவரும் தற்போது அமெரிக்க சிறையில் உள்ளனர்.

இதன் பின்னர் வெனிசுவேலாவை அமெரிக்கா நிர்வகிக்கும் என டிரம்ப் அறிவித்தார். ஆனால் உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் டெல்சி ரோட்ரிகஸ் இடைக்கால அதிபராக பொறுப்பேற்றார். இந்நிலையில் டிரம்ப் பகிர்ந்துள்ள இந்த எடிட் செய்யப்பட்ட புகைப்படம் அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!