undefined

போலீசுக்கே விபூதியா ? - காவல்துறை பெயரில் போலி முகநூல் பக்கம் தொடங்கி அட்ராசிட்டி.. இளைஞர் கைது !
 !!  

 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பகுதியில் தமிழ்ச்செல்வன்(29) என்ற இளைஞர் குடும்பத்துடன் வசித்த வருகிறார். பட்டப்படிப்பு முடித்துள்ள இவர், கட்டிட வேலைக்கு சென்றுவருகிறார். இவர் வேலை நேரம் போக மீதி நேரங்களில் எப்போதும் சமூக வலைதளங்களிலேயே மூழ்கி கிடப்பார் என கூறப்படுகிறது. 

இந்த நிலையில், TamilNadu Police என்ற பெயரில் போலியாக முகநூல் பக்கம் ஒன்றை உருவாக்கியுள்ளார். முகப்பில் தமிழ்நாடு காவல்துறையின் இலட்சினையையும் வைத்துள்ளார். எனவே, இது உண்மையான முகநூல் பக்கம் என நம்பி, சுமார் 46 ஆயிரம் பேர் இந்தக்குழுவில் இணைந்துள்ளனர். மேலும், அதில் பல தவறான தகவல்களையும் பரப்பியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, விருதுநகர் மாவட்ட சைபர் க்ரைம் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, முகநூலில் தமிழ்நாடு காவல்துறை சின்னத்தை முகப்பு படமாக வைத்திருந்த அந்தக் குழுவை ஆய்வு செய்தனர். Tamilnadu police என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் போலியான முகநூல் பக்கத்தில் காவல்துறைக்கு தொடர்பற்ற போலியான பல்வேறு பதிவுகளும் இருந்ததுள்ளது.

இந்த முகநூல் பக்கத்தை நிர்வகிப்பவர் (Admin) யார்? என்பது குறித்து சைபர் க்ரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் தமிழ்ச்செல்வன் என்பதும், அவர் காவலர் இல்லையென்பதும் தெரிய வந்ததது. இதையடுத்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். 
 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!