தனி விமானம் மூலம் மதுரை வந்திறங்கினார் துணை ஜனாதிபதி - வ.உ.சி சிலைக்கு அடிக்கல் நாட்டுகிறார்!
டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை மதுரை வந்தடைந்த துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனுக்குத் தமிழ்நாடு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகள் நேரில் சென்று துணை ஜனாதிபதியை வரவேற்றனர். மதுரையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூருக்குச் சென்ற அவர், அங்குள்ள புகழ்பெற்ற சவுமிய நாராயணப் பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார்.
மதுரை வண்டியூர் பகுதியில் அமையவுள்ள 'கப்பலோட்டிய தமிழர்' வ.உ. சிதம்பரம் பிள்ளையின் சிலைக்கு அடிக்கல் நாட்டு விழாவில் அவர் தலைமை விருந்தினராகப் பங்கேற்கிறார். சிவகங்கையில் உள்ள வீரமங்கை ராணி வேலுநாச்சியார் அரண்மனைக்கும் அவர் நேரில் சென்று பார்வையிட உள்ளார்.
முன்னதாகப் புதுச்சேரி மற்றும் மகாராஷ்டிரா மாநில ஆளுநராகப் பணியாற்றிய சி.பி. ராதாகிருஷ்ணன், துணை ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற பிறகு மதுரைக்கு வரும் முக்கியப் பயணமாக இது பார்க்கப்படுகிறது. அவரது வருகையையொட்டி மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!