undefined

மதுரை, சிவகங்கையில் துணை ஜனாதிபதி 2 நாட்கள் சுற்றுப்பயணம்... 140 அடி உயர வஉசி சிலைக்கு அடிக்கல் நாட்டுகிறார்!

 

இன்று காலை டெல்லியிலிருந்து சிறப்பு விமானம் மூலம் மதுரை வந்தடைந்த துணை ஜனாதிபதிக்குத் தமிழக அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மதுரை விமான நிலையத்திலிருந்து கார் மூலம் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்கிறார்.

பிற்பகல் 1 மணி அளவில் சிவகங்கையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ராணி வேலுநாச்சியார் அரண்மனைக்குச் சென்று பார்வையிடுகிறார். மாலை 4 மணி அளவில் மதுரை வண்டியூர் அம்மா திடலில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் பங்கேற்கிறார். அங்கு 140 அடி உயரத்தில் அமைக்கப்பட உள்ள 'கப்பலோட்டிய தமிழன்' வ.உ. சிதம்பரனாரின் பிரம்மாண்ட சிலைக்கு அடிக்கல் நாட்டி உரையாற்றுகிறார்.

அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்துக் கொண்டு, மாலை 5:50 மணி அளவில் மதுரை விமான நிலையத்திலிருந்து சிறப்பு விமானம் மூலம் மீண்டும் டெல்லிக்குத் திரும்புகிறார்.துணை ஜனாதிபதியின் வருகையையொட்டி மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, வ.உ.சி சிலைக்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெறும் வண்டியூர் பகுதியில் போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!