இன்று முதல் விக்டோரியா அரங்கம் பொது மக்களுக்கு திறப்பு...
சென்னையின் அடையாளமாகத் திகழும் விக்டோரியா பொது அரங்கம், 1887-ம் ஆண்டு ராணி விக்டோரியாவின் வைர விழாவை நினைவு கூர்ந்து கட்டப்பட்டது. நகரின் சமூக, பண்பாட்டு வரலாற்றின் உயிருள்ள சாட்சியாக இந்த அரங்கம் விளங்கி வருகிறது. ரூ.32.62 கோடி மதிப்பீட்டில் தொன்மை மாறாமல் முழுமையாக புனரமைக்கப்பட்ட அரங்கத்தை கடந்த 23-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
புதுப்பிக்கப்பட்ட விக்டோரியா அரங்கம், தற்போது அருங்காட்சியகமும் கலை மேடையும் கொண்ட பொது பண்பாட்டு தளமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த அரங்கத்தை பொதுமக்கள் இன்று முதல் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பார்வைக்கு எந்த கட்டணமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், பார்வையிட முன்பதிவு கட்டாயம். சென்னை மாநகராட்சியின் chennaicorporation.gov.in/gcc இணையதளத்தில் VICTORIA PUBLIC HALL என்பதை தேர்வு செய்து முன்பதிவு செய்ய வேண்டும். காலை 8.30 முதல் மாலை 6.30 வரை அனுமதி வழங்கப்படும் நிலையில், ஒவ்வொரு ஒன்றரை மணி நேரத்திற்கும் 60 பேர் மட்டுமே உள்ளே செல்ல முடியும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!