undefined

17 நாள் போராட்டத்திற்கு வெற்றி... முதல்வரின் அறிவிப்பை ஏற்று பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம் ஒத்திவைப்பு!

 

பணி நிரந்தரம் கோரி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வி வளாகத்தில் (DPI) கடும் குளிரிலும், மழையிலும் போராடி வந்த பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கை தற்போது முடிவுக்கு வரும் சூழல் உருவாகியுள்ளது.

இன்று சட்டசபையில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "பகுதிநேர ஆசிரியர்களின் பணி நிலையை மேம்படுத்த அரசு தயாராக உள்ளது. சிறப்பு மதிப்பெண்கள் அடிப்படையில், அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்" என அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். நீண்ட நாட்களாகப் பணி நிரந்தரத்தை மட்டுமே ஒற்றை இலக்காகக் கொண்டிருந்த ஆசிரியர்களுக்கு இது ஒரு முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது.

முதலமைச்சரின் இந்த உறுதிமொழி மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில், போராட்டத்தைத் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக ஆசிரியர் சங்கக் கூட்டியக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

"எங்களுக்குப் பாதகம் இல்லாத வகையில், தகுதியான அரசாணை (GO) விரைவில் வெளியாகும் என்ற நம்பிக்கையில் கலைந்து செல்கிறோம்" என்று ஆசிரியர் சங்க நிர்வாகிகள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!