undefined

 ஒரே குடும்பம்… மூன்று கட்சிகள்… தாணே தேர்தலில் அரிய வெற்றி!

 
 

மகாராஷ்டிரத்தில் 29 மாநகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தது. வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தாணே மாநகராட்சியில் ஒரு குடும்பம் பெற்ற வெற்றி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

தாணேவில் பிரஹ்லாத் மாத்ரே, ரேகா மாத்ரே, ரவீன் மாத்ரே ஆகியோர் வெவ்வேறு வார்டுகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். பிரஹ்லாத் மாத்ரே மஹாராஷ்டிர நவநிர்மான் சேனா சார்பிலும், ரேகா மாத்ரே சிவசேனை சார்பிலும், ரவீன் மாத்ரே பாஜக சார்பிலும் போட்டியிட்டனர். மூன்று வேறு கட்சிகள் என்றாலும் ஒரே குடும்பம் என்பதால் இந்த வெற்றி பேசுபொருளாகியுள்ளது.

இதேபோல் ஜால்கான் மாநகராட்சியிலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால் அவர்கள் மூவரும் சிவசேனை கட்சி சார்பில் போட்டியிட்டவர்கள். ஒரே குடும்பத்தில் இருந்து பலர் அரசியலில் வெற்றி பெறுவது மகாராஷ்டிர அரசியலில் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!