வீடியோ!!  தண்ணீரை காப்போம்; தாய் நிலத்தை காப்போம்!! ஸ்டாலின்  சூளுரை!!

 

நீரின்றி அமையாது உலகு என்கிறார் திருவள்ளுவர். 3 பங்கு நீராலும் , 1 பங்கு நிலத்தாலும் சூழப்பட்டது தான் உலகு. இதில்  1 பங்கு நிலத்தில் வாழ்ந்து கொண்டு தான் மனித இனமாகிய நாம் வாழத் தேவையான நீரை ஆக்கிரமிப்பு செய்து நீர்நிலைகளை அழித்து வருகிறோர்ம். இன்று உலக தண்ணீர் தினத்தில் தண்ணீரின் தேவையையும், அதன் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு இன்று கிராம சபை கூட்டம் நடத்த உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் தண்ணீரை சேமிப்பது, மற்றும் நீர்நிலைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது குறித்து முதல்வர் ஸ்டாலின் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

குட்டை,  குளம்,  ஊரணி,  ஏரி, ஏந்தல்,  கண்மாய்,  ஆறு,  நீரோடை,  கடல் என்று பிரித்து பெயர் சூட்டியுள்ளனர்.    தாயைப் பழித்தாலும் தண்ணீரை பழிக்காதே என்பதுதான் தமிழின் பழமொழி.
நம்மை காக்கும் தண்ணீரை நாம் காக்க வேண்டும்.  நீரை வீணாக்கக்கூடாது;  பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.  தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.  நீர் நிலைகளை மாசுபடாமல் காக்க வேண்டும். தூர்வாரி வைத்திருக்க வேண்டும்.


இன்றைக்கு ஒரு நாட்டின் பலம் என்பது நீர் வளமாக,  இயற்கை வளமாக கணக்கிடப்படும் சூழலுக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.  புவி வெப்பமயமாகி வருகிறது,  இதிலிருந்து நம்மை காப்பது தண்ணீர் மட்டும் தான்.  நீர் இல்லையேல் உயிர் இல்லை என்பதை அனைவரும் உணர்வீர்கள்.  தண்ணீரை காப்போம்; தாய் நிலத்தை காப்போம் என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ மூலம் தண்ணீரின் அவசியத்தையும், அதை பாதுகாக்க வேண்டிய அத்தியாவசியத்தையும் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார் முதல்வர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!