வைரல் வீடியோ... நகராட்சி அலுவலகத்தில் காளையுடன் புகுந்த விவசாயி.. மிரண்டு போன ஊழல் அதிகாரிகள்!

 

கர்நாடகாவில் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் அங்கு ஆளும் பாஜகவும், எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரமாக தொடங்கியுள்ளன. ஏற்கனவே அம்மாநிலத்தில் பல்வேறு லஞ்ச, ஊழல் புகார்கள் ஆளும் பாஜகவுக்கு கடும் சவாலாக உள்ளது. 

இந்த ஊழல் குற்றச்சாட்டுகளை நிரூப்பிக்கும் வகையில் பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்துதான் வருகிறது. இந்த விவகாரம் ஆளும் பாஜகவுக்கு கழுத்தை இறுக்கும் கயிறாக உள்ளது. 

நகராட்சி அதிகாரிகள் இதற்கு ரூ.25,000 லஞ்சம் கேட்டுள்ளனர். விவசாயி எல்லப்பாவும் பணத்தை திரட்டி ரூ.25,000 தந்துள்ளார். அதன் பின்னரும் வேலையை முடித்து தராமல் கூடுதலாக ரூ.25,000 தர வேண்டும் என்றுள்ளனர். இதனால் கோபமடைந்த விவசாயி எல்லப்பா, தனது காளை மாட்டை ஓட்டி நகராட்சி அலுவலகத்திற்குள் புகுந்தார்.

அங்கு சென்ற அவர் அதிகாரிகளிடம் தன்னிடம் பணம் எல்லாம் இல்லை, இந்த காளை மாட்டை வைத்துக்கொண்டு காரியத்தை முடித்து தாருங்கள் என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட பலர் அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு தொடர்புடைய 5 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு நிர்வாக தரப்பு உறுதி அளித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!