பகீர் வீடியோ.. லாரி மீது மோதி தரதரவென்று இழுத்து செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்... நூலிழையில் உயிர் பிழைத்த பயணிகள்!

 

ஜார்க்கண்ட் மாநிலம், தியோகர் மாவட்டத்தில் நிகழ்ந்த இந்த விபத்து, ரயில்வே நிர்வாகத்தின் அலட்சியத்தை மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

கோண்டாவிலிருந்து அசன்சோல் நோக்கிச் சென்று கொண்டிருந்த கோண்டா-அசன்சோல் எக்ஸ்பிரஸ் (Gonda-Asansol Express) ரயில், தியோகர் மாவட்டம் நவாத் பகுதியில் உள்ள ஒரு ரயில்வே கிராசிங் இடத்தில், கடந்து செல்கையில் ரயில்வே கேட் மூடப்படாமல் இருந்துள்ளது. இதனால் வாகனங்கள் வழக்கம் போலத் தண்டவாளத்தைக் கடந்து சென்றுக் கொண்டிருந்தன. அப்போது தண்டவாளத்தின் நடுவே வந்த லாரி மீது ரயில் மோதியது.

சிக்னல் கோளாறு அல்லது தகவல்தொடர்பு இடைவெளியால் ரயில்வே கேட் திறந்திருந்தது. இருப்பினும், தூரத்தில் லாரி இருப்பதைப் பார்த்த எக்ஸ்பிரஸ் ரயிலின் இன்ஜின் டிரைவர், உடனடியாகத் துரிதமாகச் செயல்பட்டு ரயிலின் வேகத்தைக் குறைத்தார். ரயில் மெதுவான வேகத்தில் லாரியின் மீது மோதியதால், லாரி உருக்குலைந்த போதிலும் ரயிலில் இருந்த பயணிகளுக்குப் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்தில் இருந்து பயணிகள் உயிர்பிழைத்தனர். இந்த மோதலில் வாகன ஓட்டிகள் இருவர் லேசான காயமடைந்தனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

ரயில்வே கேட் கீப்பர் பணியில் இருந்தாரா அல்லது சிக்னல் கோளாறு காரணமா என்பது குறித்து கிழக்கு ரயில்வே உயர் அதிகாரிகள் துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். விபத்தில் சிக்கிய லாரியின் இடிபாடுகளை அகற்ற சுமார் 3 மணிநேரம் ஆனது. இதனால் அந்த வழித்தடத்தில் செல்லும் ஜசிதி - அசன்சோல் பிரிவில் ரயில் போக்குவரத்து தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டது.

ஜார்க்கண்ட் மற்றும் பீகார் மாநிலங்களில் பல இடங்களில் மனிதர்களால் இயக்கப்படும் ரயில்வே கேட்டுகள் (Manned Level Crossings) சரியாக இயக்கப்படாதது குறித்துப் பயணிகள் தொடர்ந்து புகார் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!