undefined

வீடியோ: தமிழகம் முழுவதும் பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு.. ஸ்ரீரங்கத்தில் ரத்தின அங்கி தரிசனத்தில் நம்பெருமாள்!

 

108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழாவின் சிகர நிகழ்ச்சியான பரமபதவாசல் திறப்பு இன்று அதிகாலை வெகு விமர்சையாக நடைபெற்றது. நேற்று (பகல்பத்து 10-ம் நாள்) நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இன்று அதிகாலை 4.30 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து நம்பெருமாள் ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து புறப்பட்டார். கோவிந்தா முழக்கம்: சரியாக அதிகாலை 5.45 மணியளவில் பரமபதவாசல் திறக்கப்பட்டது. அப்போது நம்பெருமாள் அதன் வழியாக எழுந்தருளினார். அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் "கோவிந்தா கோவிந்தா", "ரங்கா ரங்கா" என பக்திப் பரவசத்துடன் முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஸ்ரீரங்கம் மட்டுமல்லாது தமிழகத்தின் அனைத்து முக்கிய பெருமாள் கோவில்களிலும் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது:

இன்று ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பையொட்டி திருச்சி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாநகர போலீஸ் கமிஷனர் காமினி தலைமையில் 5,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பக்தர்களுக்காகக் குடிநீர், தற்காலிக கழிப்பறைகள் மற்றும் மருத்துவ வசதிகள் மாநகராட்சி சார்பில் செய்யப்பட்டுள்ளன.

இரவு முழுவதும் கண்விழித்து காத்திருந்த பக்தர்கள், சொர்க்கவாசல் வழியாகச் சென்று பெருமாளைத் தரிசிப்பதன் மூலம் வைகுண்டப் பதவி கிட்டும் என்பது ஐதீகம். இதையொட்டி கோவில்களில் சிறப்புப் பஜனைகளும், ஆன்மிகச் சொற்பொழிவுகளும் நடைபெற்று வருகின்றன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!