பகீர் வீடியோ... லாரி மோதி கோர விபத்து... 5 போலீசார் பலி!
ஒடிசா மாநிலம் ஜார்சுகுடா நகரில் உள்ள சதர் காவல் நிலையம் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் லாரி ஒன்று போலீஸ் வாகனம் மீது மோதி கோர விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 5 போலீசார் உயிரிழந்தனர். உயிரிழந்த போலீசார் மற்றும் காயமடைந்தவர்கள் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு தங்களது வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த மற்ற 3 போலீசார் உடனடியாக மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவம் குறித்து ஒடிசா போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய லாரி டிரைவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அதிகாலை நேரத்தில் நேர்ந்த இந்தத் துயரச் சம்பவம் ஒடிசா காவல் துறையினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!