ஒரே மேடையில் விஜய் - அஜித்? இன்று மலேசியாவில் நடக்குமா அந்த வரலாற்றுத் தருணம்!
நடிகர் விஜய்யின் அரசியல் வருகைக்கு முந்தைய மிக முக்கியமான படமாகக் கருதப்படும் 'ஜனநாயகன்' படத்தின் ஆடியோ லான்ச் இன்று மலேசியாவில் நடைபெறுகிறது. இந்த விழாவில் நடிகர் அஜித்குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வாரா என்ற கேள்வி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
இருவருமே மலேசியாவில்: 'ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழாவிற்காக விஜய் மற்றும் படக்குழுவினர் மலேசியாவில் உள்ளனர். அதே நேரத்தில், நடிகர் அஜித்குமார் தனது 'ரேஸிங்' (Racing) பயிற்சிக்காகவும், போட்டிகளுக்காகவும் கடந்த சில நாட்களாக மலேசியாவிலேயே தங்கியுள்ளார்.
ரேஸிங் கால அட்டவணையின்படி, இன்று அஜித்திற்கு எந்தப் போட்டிகளும் இல்லை. இதனால் அவர் ஓய்வில் இருப்பார் என்பதால், விஜய்யின் அழைப்பை ஏற்று விழாவிற்கு வர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு 'உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்' போன்ற படங்களின் மேடையிலோ அல்லது கலைஞர்-80 போன்ற விழாக்களிலோதான் இவர்களை ஒன்றாகப் பார்த்திருக்கிறோம். தற்போது தமிழக அரசியலிலும், சினிமாவிலும் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வரும் சூழலில், இவர்கள் இருவரும் ஒரே மேடையில் தோன்றினால் அது இந்திய சினிமாவிலேயே மிகப்பெரிய வரலாற்றுத் தருணமாக அமையும்.
இருப்பினும் அஜித்குமார் பொதுவாகப் பொது நிகழ்ச்சிகளிலும், சினிமா தொடர்பான விழாக்களிலும் கலந்து கொள்வதைத் தவிர்ப்பவர். ஆனால், விஜய்யுடன் அவருக்கு இருக்கும் தனிப்பட்ட நட்பு மற்றும் அவர்கள் இருவரும் ஒரே நாட்டில் இருக்கும் சூழல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுவரை அஜித்தின் வருகை குறித்து அதிகாரப்பூர்வத் தகவல் எதுவும் வெளியாகவில்லை. ஆனால், விழா நடைபெறும் அரங்கிற்கு வெளியே அஜித் ரசிகர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் என இரு தரப்பினரும் பெருமளவில் குவிந்து வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!