இன்று திருச்சியில் விஜய் வேட்புமனு தாக்கல்... வேகமெடுக்கும் தேர்தல் திருவிழா!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் விஜய், சென்னை பெரம்பூர் தொகுதியில் ஏற்கனவே தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ள நிலையில், இன்று திருச்சி கிழக்குத் தொகுதியில், தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்ய உள்ளார்.
திருச்சி அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் அமைந்துள்ள தேர்தல் நடத்தும் அலுவலரிடம் விஜய் தனது மனுவைச் சமர்ப்பிக்கிறார். இதற்காக இன்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி செல்லும் விஜய், அங்கிருந்து சாலை மார்க்கமாகத் தேர்தல் அலுவலகத்திற்குச் செல்கிறார். விஜய்யின் வருகையை முன்னிட்டு திருச்சியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வேட்புமனுத் தாக்கலுக்குப் பிறகு, திருச்சி கிழக்குத் தொகுதிக்கு உட்பட்ட முக்கியப் பகுதிகளில் விஜய் தேர்தல் பரப்புரையிலும் ஈடுபட உள்ளார்.
இன்று மதியம் தொடங்கும் பரப்புரை மாலை வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் முதன்மை வேட்பாளராகக் களமிறங்கியுள்ள விஜய்யைப் பார்க்கத் தொண்டர்களும் ரசிகர்களும் அதிக அளவில் திரள்வார்கள் என்பதால், காவல்துறையினர் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தத் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!